பிரபல நடிகர் பகத் பாசில் திரைப்படங்கள் இனி திரையரங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பெரும் உயிர் பலியை வாங்கி வருகிறது. தற்போது அதன் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகையால் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலின் சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது திரையரங்குகளில் கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டும் நடிகர் பகத் பாசிலின் திரைப்படம் தொடர்ந்து ஓடிடியில் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் இனி இவரது திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இச்செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.