ஸ்விட்சர்லாந்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து ஒரு குடும்பமே தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் மோன்ட்ரீயுக்ஸ் என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் 51 வயதுடைய நபர், அவரின் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் அந்த பெண்ணின் சகோதரி ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு குற்றத்திற்காக அந்த நபரை காவல்துறையினர் கைது செய்வதற்காக சென்றிருக்கிறார்கள்.
ஜன்னல் வழியே காவல்துறையினர் வருவதை பார்த்த அந்த குடும்பம், ஏழாவது மாடியில் இருந்து குதித்து விட்டனர். காவல்துறையினர் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே இச்சம்பவம் நடந்துவிட்டது. இதில், அந்த குடும்பத்தில் இருந்த ஐந்து பேரில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மீதமுள்ள ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.