பஞ்சாப் மாநிலத்தில் டிராபிக்கில் சாக்ஸ் விற்ற சிறுவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார் அம்மாநில முதல்வர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டிராபிக்கில் 10 வயது சிறுவன் ஒருவன் சாக்ஸ் விற்று வந்தான். மேலும் அவரது தந்தையும் சாக்ஸ் வியாபாரி தான். இவரது வீட்டில் தாய் மற்றும் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர் . வாடகை வீட்டில் வசித்து வரும் இந்த சிறுவன் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை தொழில் செய்து வந்துள்ளார். இதைக் கண்ட ஒருவர் வீடியோவாக எடுத்து அந்த சிறுவனின் நிலையை குறித்து கேட்டார். அப்போது தான் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப வறுமையின் காரணமாக தந்தையின் தொழிலை செய்து வருவதாக அந்த வீடியோவில் சிறுவன் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த நபர் 50 ரூபாய் கூடுதலாக கொடுத்தும் அதை வாங்க மறுத்து விட்டான். இந்த வீடியோவை அந்த நபர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பஞ்சாப் முதல்வர் சிறுவனுடன் வீடியோ காலில் பேசி அந்த சிறுவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். மேலும் சிறுவனின் குடும்ப வறுமையை போக்குவதற்கு 2 லட்சம் நிவாரண நிதியும் அளித்தார். அந்த சிறுவனின் கல்வி செலவு அனைத்தையும் மாநில அரசு ஏற்கும் என்று கூறினார். இதைதொடர்ந்து இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அம்ரித் சிங் பதிவிட்டிருந்தார்.