டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை செயலற்ற 2 பேரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்தனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சச்சின் என்ற 26 வயது தொழிலாளி மற்றும் 61 வயதான மிட்டல் ஆகியோர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரது குடும்பத்தினரும் உறுப்பு தானம் செய்ய தானாக முன்வந்தனர்.
அதன்படி 2 இருதயங்கள், 4 சிறுநீரகங்கள், 4 கருவிழி வட்டங்கள் மற்றும் எலும்புகள் கடந்த 48 மணி நேரத்தில் வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்படுள்ளன. இதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 7 பேரின் உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் 10,000 பேர் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கும் ஒரு மனம் வேண்டும். சிலர் உறுப்புகள் தானம் செய்வதற்கு முன் வருவதில்லை. ஆனால் ஒரு சிலர் தனது பிள்ளையோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ மூளைச்சாவு அடைந்தால் தானம் செய்கின்றனர்.