வியாபாரியிடம் பறக்கும் படையினர் என்று கூறி நகை-பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனையடுத்து பணப்பட்டுவாடா நடைபெற்றுவிடக்கூடாதென பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .
மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் ஒரு வியாபாரி. இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் வேளையில் திடீர்ரென்று 2பேர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என்று கூறி வியாபாரி ஆறுமுகத்தை வழிமறித்தனர்..
பின்னர் சோதனையில் ஈடுபட்டவர்கள் ஆறுமுகத்திடம் இருந்து செல்போன் . 3 பவுன் நகை, ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு காவல்நிலையத்தில் வந்து வாங்குமாறு கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்
இதனையடுத்து சிறிது நேரத்திலையே வந்தவர்கள் அதிகாரிகள் அல்ல அதிகாரி போல் நடித்தவராகள் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தார் அதன்பின் ஆறுமுகம் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ,இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது