தன் பெயரில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது புகார் அளிக்கப்போவதாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் தெரிவித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் நாடகம் முன்னணி தொடர்கள் ஒன்றாக இருக்கிறது. குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய இத்தொடரில் வரும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் குமரன் தங்கராஜன். இந்நிலையில் முகநூல் பக்கத்தில் இவரது பெயரில் அதிகமான போலி கணக்குகள் இருக்கிறது.
அதிலிருந்து சில குறுஞ்செய்திகள் பதிவாகி வருகிறது. அதனைத்தான் அனுப்பவில்லை என்று குமரன் தெரிவித்துள்ளார். மேலும் தான் முகநூல் பக்கத்தில் ஆக்டிவாக இல்லை என்றும் கூறியுள்ளார். இப்படி தன் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலியான பக்கங்களை திறந்துள்ளவர்கள் மீது நான் புகார் அளிக்க உள்ளதாகவும் குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.