துருக்கியில் இருக்கும் ஒரு கோவிலில் மனிதர்கள் மர்மமாக உயிரிழப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்திருக்கிறது.
உலக நாடுகளில் பல வருடங்கள் பழமை வாய்ந்த கோவில்கள் நிறைய இருக்கின்றன. ஆய்வாளர்கள் பூமிக்குள் புதைந்த நிலையில் இருக்கும் கோவில்களை தோண்டி எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டு, மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். அதன்படி, துருக்கியில் இருக்கும் Hierapolis என்ற நகரத்தில் மிகப்பழமை வாய்ந்த கோயில் ஒன்று இருக்கிறது.
அந்த கோயிலை நரகத்தின் நுழைவு வாயில் என்பார்கள். அதாவது இந்த கோயிலுக்குள் செல்பவர்கள் இதுவரை திரும்பி வந்ததே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகள், விலங்குகள் என்று எந்த உயிரினங்கள் அங்கு சென்றாலும், அந்த கோயிலிலிருந்து திரும்பி வந்ததில்லை.
எனவே தான், இந்த கோயிலை, ‘நரகத்தின் நுழைவு வாயில்’ என்று கூறுகிறார்கள். இது பற்றி விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது, இந்த கோவிலின் அடியிலிருந்து விஷ கார்பன்-டை-ஆக்சைடு வாயு தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே தான் அங்கு செல்லும் உயிரினங்கள் மூச்சு திணறி, உயிரிழப்பதாக கூறுகிறார்கள்.
சரியாக 10% கார்பன்டை ஆக்சைடு இருக்கும் பட்சத்தில், ஒரு மனிதன் 30 நிமிடங்களில் உயிரிழந்து விடுவார். ஆனால், அந்த கோவிலில் 91% விஷ கார்பன்-டை-ஆக்சைடு வாயு இருக்கிறது. எனவே, அங்கு செல்பவர்கள் உடனடியாக இறந்துவிடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் விளக்கம் கொடுத்த பின்பும், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த கோவிலில் பேய் உள்ளது என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.