தென்னாபிரிக்கா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பாப் டு பிளெஸிஸ் இராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை சொந்த மண்ணில் இழந்ததால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 3 வகை கிரிக்கெட் போட்டிக்கும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த பிளெஸிஸ், இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்கள் உலகக்கோப்பை தொடரில், அணி தோல்வியை சந்தித்ததையடுத்து, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை இராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி-20 கிரிக்கெட் அணியின் தலைவராக மட்டும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் இந்த பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் தென்னாபிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு நிரந்தர கேப்டனாக குயிண்டன் டி காக், நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரின்போது டி-20 அணிக்கு கேப்டனாக செயல்பட்ட குயிண்டன் டி காக் 3 வகை கிரிக்கெட்டிற்கும் அணித்தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தென்னாபிரிக்காவிற்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக சென்ற இங்கிலாந்து அணி, தென்னாபிரிக்க அணியை நிலைகுலைய வைத்தது.
தென்னாப்பிரிக்க முதலில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 1-3 என இழந்தது. இதன்பிறகு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இறுதியாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
டு பிளெசிஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு 3 வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இதுவரை மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 112 சர்வதேச போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியுள்ளார். முதன்முறையாக தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்திய நியூசிலாந்து அணிக்கெதிரான டி-20 தொடரில், 2-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்கா அணிக்கு 36 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த டு பிளெஸிஸ், 18 போட்டிகளில் வெற்றியையும், 15 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதேபோல, 39 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த டு பிளெஸிஸ், 28 போட்டிகளில் வெற்றியையும், 10 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
மேலும், 37 டி-20 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணியை வழிநடத்திய டு பிளெஸிஸ், 23 போட்டிகளில் வெற்றியையும், 13 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. டு பிளெசிஸ் கேப்டனாக இருந்து 11 சதங்களையும் 28 அரைசதங்களையும் அடித்துள்ளார். அத்தோடு அனைத்து போட்டிகளிலும் 5,101 ரன்களையும் குவித்துள்ளார்.
35 வயதான பாப் டு பிளெஸிஸ், இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் 3,901 ரன்களையும், 143 ஓருநாள் போட்டிகளில் விளையாடி 5,507 ரன்களையும், 44 டி20 போட்டிகளில் விளையாடி 1363 ரன்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#BreakingNews @faf1307 has announced that he is stepping down from his role as captain of the Proteas’ Test and T20 teams effective immediately. #Thread pic.twitter.com/ol9HzpEOhZ
— Proteas Men (@ProteasMenCSA) February 17, 2020
BREAKING!
Faf du Plessis has announced he is stepping down as South Africa captain from all formats! pic.twitter.com/ukBYGgduiX
— ICC (@ICC) February 17, 2020