சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உயிரியல் பூங்காவில் 21-வது ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் மத்திய உயிரியல் ஆணையத்தின் கீழ் 147 பெரிய உயிரியல் பூங்காக்கள் செயல்படுகிறது. இந்தப் பூங்காக்களின் மேலாண்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் கீழ் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு நம்முடைய விலங்குகளுக்கும், பார்வையாளர் களுக்கும் சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உயிரியல் பூங்காக்கள் ஆதரவற்ற விலங்குகளின் மறு வாழ்விடமாகவும், வனவிலங்கு பாதுகாப்பில் முக்கிய பங்கும் வகிப்பதால் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையமானது தேசிய மற்றும் சர்வதேச ஆணையங்களுடன் இணைந்து மேலாண்மை நடைமுறைகள், சிறந்த பராமரிப்பு, சுகாதார மற்றும் உலகெங்கும் உள்ள சிறந்த நடைமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பரிமாற்ற திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இதனையடுத்து உயிரியல் பூங்காக்களுக்கு வரும் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதனைய டுத்து பூங்காவிற்கு வரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். இதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளப்பாதைகள் அமைத்துக் கொடுப்பதோடு வாகன வசதிகளை உருவாக்கிக் கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் உயிரியல் பூங்காக்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.