உலக அளவில் பல கோடி வாடிக்கையாளர்களால் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்தப் படுகிறது. இந்த பேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மெட்டா நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. சமீபத்தில் சேவா என்ற தொழில்நுட்ப வைரஸ் குறித்த தகவல் வெளியானது. இந்த சேவா வைரஸ் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது. இதை பயன்படுத்தி நம்முடைய தரவுகளை திருடுகிறார்கள். அதோடு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தையும் எளிதாக திருடி விடுகிறார்கள்.
எனவே ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். இந்நிலையில் தற்போது பேஸ்புக்கின் பாஸ்வேர்ட் திருடப்படுவதாக புகார் வந்துள்ளது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களின் பாஸ்வேர்டு திருடப்பட்டுள்ளது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட செயலிகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி வேறு எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மேலும் செல்போனுக்கு வரும் தேவையில்லாத மெசேஜ் லிங்கையும் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும், உங்கள் பேஸ்புக்கை யாராவது ஹேக் செய்கிறார்கள் என்று உங்களுக்கு தோன்றினால் உடனடியாக பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள் எனவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.