Categories
உலக செய்திகள்

100 கோடி பயனாளர்களின்…. இந்த சேவை நீக்கம்…. பிரபல சமூக வலைத்தளம் அறிவிப்பு….!!

முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் கடந்த வாரம் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றிய நிலையில் முக அடையாளம் காணும் சேவையையும் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிமுறைகளை பல நாடுகள் வெளியிடாத நிலையில் அதை கைவிடுவதாகவும், 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்குவதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஃபேஸ்புக்கின் கீழ் ஏற்கனவே பல நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் பல நிறுவனங்களும் வரவுள்ளன. இந்த நிலையில், அவை அனைத்தும் ஃபேஸ்புக் சமூக வலைதள நிறுவனமாக மட்டுமே அறியப்படுவது சரியல்ல என்றே இந்த புதிய பெயரை மார்க் வைத்துள்ளார்.

மேலும், சமூக வலைதள சர்ச்சைகள் அனைத்து நிறுவனங்களையும் பாதிக்கக்கூடாது என்பதிலும் மார்க் தெளிவாக உள்ளார். அதோடு, மெட்டா என்னும் பெயரானது மார்க்கின் கனவு திட்டமான Metaverse-இல் இருந்து வந்தது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே Metaverse உருவாகும் முயற்சியில் ஃபேஸ்புக் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது.

Categories

Tech |