Categories
தேசிய செய்திகள்

கொத்தாக சிக்கிய பேஸ்புக் காதல் மோசடி கும்பல்… 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது… அதிரடி காட்டிய போலீஸ் ..!!

கர்நாடக மாநிலத்தில் காதல் ஆசை கூறி ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கும்பேளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஜீனத்திற்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜீனத்தை பார்ப்பதற்கு சுரேஷ் மங்களூரு சென்றுள்ளார். மங்களூரு சென்ற சுரேஷை, ஜீனத் அவரது வீட்டிற்கு தனது கார் மூலம் அழைத்துச் சென்றார்.

வீட்டிற்குள் சென்ற சுரேஷை  ஜீனத் உட்பட நான்கு பேர் சேர்ந்து அடித்து அவரின் ஆடைகளை கழற்றி மோசமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.அந்தப் புகைப்படத்தை காட்டி சுரேஷிடம் 5 லட்சம் ரூபாயை கேட்டு அந்த கும்பல் மிரட்டி உள்ளது. சுரேஷ் தன்னிடம்  இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை என்று கூறி கையில் இருந்த 30,000 ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை நான் எற்பாடு செய்து தருகிறேன் என்று கூறி அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

அதன்பின் அவர் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சுர்தகால் காவல் துறையினர், கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரட்கலின் ரேஷ்மா என்ற நீமா, ஜீனத் என்ற ஜீனத் முபீன், அவரது கணவர் இக்பால் முகமது என்ற இக்பால், நசிப் என்ற அப்துல் காதர் நஜீப் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் இது போன்று பேஸ்புக்கில் காதல் வார்த்தைகள் பேசி 6 இளைஞர்களை தங்கள் வீட்டிற்க்கு அழைத்து வந்து அவர்களை கடுமையாக தாக்கி ஆடைகளற்ற புகைப்படங்களை எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்தது தெரியவந்தது.

Categories

Tech |