கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர்.