Categories
தேசிய செய்திகள்

Facebook Live: 4 பேரும் சாகப் போறோம்…. சிரித்தபடியே சொன்ன அடுத்த நொடியே நடந்த மரணம்…. பெரும் பரபரப்பு…..!!!!!

புதுடெல்லியில் பிஎம்டபிள்யூ காரில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பேஸ்புக் லைவில் 4 பேரும் சாகப் போகிறோம் என்று கூற மற்றவர்களும் சிரித்துக்கொண்டே ஆமாம் நாங்கள் சாகப் போகிறோம் என்று சொல்ல திடீரென 4 பேருமே இறந்து விட்டனர். அதாவது கடந்த வெள்ளிக் கிழமை சுல்தான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பிஎம்டபிள்யூ காரில் 4 நண்பர்களும் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். இதை காரில் இருந்த ஒருவர் facebook லைவில் காண்பித்துக் கொண்டே வந்தார். அப்போது தங்களுடைய கார் 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது என்றும், இன்னும் சற்று நேரத்தில் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் கூறினார்.

இதனையடுத்து மற்றொருவர் நாங்கள் 4 பேரும் சாகத்தான் போகிறோம் என்று சிரித்தபடியே கூற, அடுத்த நிமிடமே ஒரு ட்ரக் காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். இதனையடுத்து டிரக்கை ஓட்டி வந்த வாகன ஓட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தை பார்த்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிதறி கிடந்த உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு பிஎம்டபிள்யூ கார் நிபுணர்கள் விபத்துக்குள்ளான பகுதிக்கு வரவழைத்து காரை சோதனை செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர் ஆனந்த் பிரகாஷ், இன்ஜினியர் தீபக் குமார் மற்றும் தொழிலாளர்கள் அகிலேஷ், முகேஷ் ஆகிய 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேருக்கு 35 வயது இருக்கும் நிலையில், பேஸ்புக் லைவில் சிரித்த படியே நாங்கள் சாகப் போகிறோம் என்று கூறிய 4 பேரும் அடுத்த நொடியே விபத்தில் சிக்கி  உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |