பல ஆண்டுகளாக இருந்த பேஸ்புக் கிளாசிக்கல் டிசைனை செப்டம்பர் மாதம் அந்த நிறுவனம் மாற்ற உள்ளது.
கணினியில் பேஸ்புக் பயன்படுத்தி வரும் பயனாளர்களின் பழைய இணையப்பக்கம் செப்டம்பர் முதல் மாற்றப்பட உள்ளது. பல ஆண்டுகளாக பிரௌசர் வழியாக பேஸ்புக் வலைத்தள பக்கத்தை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செயலியின் மேம்பாட்டுப் பணிகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் பேஸ்புக் செயலியையும் அதன் பிரத்தியோக வசதிகளையும் அனுபவித்து வருகின்றனர்.
செல்போனில் சேமிப்பு திறனில் குறைபாடுகள் ஏற்படுவதால் இன்றளவும் பிரவுசரில் ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி விடுகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த பேஸ்புக் கிளாசிக் டிசைனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலாக புதிய வடிவமைப்பு செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை அலுவலர் 2022 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.