ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். செல்போன் இணைப்பு பெறுவதற்கும், வங்கிக் கணக்குகளை பெறுவதற்கும் ஆதார் அவசியமாக தேவைப்படுகிறது. வங்கிக் கணக்கு உள்ளிட்ட பணபரிவர்த்தனைகளில் ஆதார் இணைப்பு அவசியமாகிறது. இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமூக வலைதள கணக்குகளை தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் தொடங்க அரசின் அடையாள அட்டையை இணைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே மக்களே கவலை வேண்டாம்.