கடந்த 2007ஆம் ஆண்டு தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டையினால் தாயை பிரிந்த மகள் சுமார் 14 வருடங்களுக்கு பின்பாக தற்போது பேஸ்புக்கின் மூலம் அவரை கண்டறிந்த சம்பவம் அனைவரிடத்திலும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டையினால் மகள் ஜாக்லினை தந்தை டெக்சாஸ்ஸிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் ஜாக்லினின் தாய் தனது மகளை காணவில்லை என்று காவல் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜாக்லின் தனது தாயை பேஸ்புக்கின் மூலம் அடையாளம் கண்டு மீண்டும் ஒன்றாக சேர்ந்துள்ளார். எவ்வாறெனில் ஜாக்லினிற்கு அவருடைய தாயின் பெயர் மட்டுமே நினைவில் இருந்துள்ளது. அவ்வாறு நினைவிருந்த அந்த பெயரை இணையத்தில் மிகவும் பிரபலமாகவுள்ள பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதன்பின்பு பேஸ்புக்கில் வந்த பலருடைய முகங்களில் தனது முக ஜாடைக்கு ஒத்துப்போயிருந்த நபரை தேர்ந்தெடுத்து அவரிடம் தன்னுடைய விலாசம் முழுவதையும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜாக்லின் தனது முகஜாடையாக இருப்பவரை ஃபேஸ்புக்கில் தேர்ந்தெடுத்து பேசிய அந்த நபரே அவரின் அம்மாவாக இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இருவரும் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பின்பாக இணையத்தில் மிகவும் பிரபலமான பேஸ்புக்கின் மூலம் ஒன்றாக சேர்ந்துள்ளார்கள்.