திண்டுக்கல்லில் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே துண்டித்து தொடர்பில் செல்லும் சாலை அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், சைக்கிளில் வந்த ஒரு நபரும் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்தபோது மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை காவல் அதிகாரி பெருமாள் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தலையில் ஐந்து தையல் போடப்பட்ட நிலையில் அவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனுடைய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிய நிலையில், அதனை அப்பகுதி காவல்துறையினர் ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.