Categories
அரசியல் மாநில செய்திகள்

சிக்ஸர் அடித்த முக.ஸ்டாலின்…. ஸ்கோர் செய்த எடப்பாடி… ஷாக் ஆன திமுக உப்பிக்கள் .!!

7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு மூலம் ஏழை எளிய அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவு பறிக்கப்படுகின்றது என்று பெரும்பாலானோர் குற்றசாட்டு எழுப்பி வந்தனர். இதனை தவிர்க்கும் வகையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வழி செய்யும் வகையில் தமிழக அரசு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா வுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படியே தற்போது மருத்துவ படிப்பில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்த மருத்துவ சேர்க்கையில் மாணவர்கள் சிலருக்கு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்ததால் மருத்துவ படிப்புச் செலவை கட்ட முடியாத ஒரு தவிப்போடு இருந்து வந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், அரசு பள்ளியில் படித்து தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு சார்பாக மாணவர்கள் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இது மக்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |