கொரோனா அச்சுறுத்தி வரும் இந்த காலகட்டத்தில் மருந்தகங்களில் ஆணுறை விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருந்தகங்களில் கூட்டங்கள் நிறைந்து வழிகின்றன.
இக்கட்டான காலகட்டத்தில் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் அதே சூழலில் ஆணுறை, கருத்தடை ஏற்படுத்தும் மருந்துகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளதாக மருந்தகங்கள் மற்றும் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.