பெண்களுக்கு இயற்கையாகவே முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றும் சில வழிமுறைகள்
- பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டுவந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழித்து துணியால் துடைத்து எடுத்தால் கரும்புள்ளிகள் குறைவதை காணலாம்.
- தேனுடன் பட்டை பொடியை சேர்த்து எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் போட்டு வந்தால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்து விடும்.
- ஓட்ஸ் பொடியை தயிரில் கலந்து முகத்திற்கு போட்டு வருவதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி முகம் பொலிவு பெறும்.
- கிரீன் டீ போட்ட பின்னர் அந்த இலைகளை வைத்து முகத்தில் நன்றாக ஸ்க்ரப் செய்து வருவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அகன்றுவிடும். சருமமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
- பாலில் பஞ்சை வைத்து தினமும் மூன்று முறை முகத்தை சுத்தப்படுத்தினால் முகம் மென்மையாகவும் இருக்கும். கரும்புள்ளிகளும் காணாமல் போகும்.