மக்களவையின் முன்புள்ள காந்திசிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் , உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தின் முன்புறம் உள்ள காந்தி சிலையில் போராட்டம் நடத்தினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கண்ணை கட்டிக்கொண்டும் , வாயை பொத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு நடத்தி இந்த வன்முறையை நங்கள் கண்டுகொள்ளாமல் , பார்க்காமல் , பேசாமல் இருக்கணும் என்று அரசு நினைக்கின்றது என்பதை கண்டிக்கும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தினர்.