தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இயந்திர நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேளாண்மைதுறை சார்பாக இயந்திர நடவு பணி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திர நடவு பணியின் மூலம் ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்றும், தண்ணீர் பயன்பாட்டை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இயந்திர நட விருப்பு ஏக்கருக்கு 2,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் வேளாண்மை துறையின் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயந்திர முறையில் நெல் நடவு செய்யும் பணி இன்று நடைபெற்றது. விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள இத்தருணத்தில் விவசாயிகள் அனைவரும் இயந்திர நடவு முறை பயணிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.