Categories
தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்!…. 8 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்…. பரபரப்பு….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிழக்கு சீங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியை தலைமையாசிரியர் புதருக்குள் அடிக்கடி இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த ஒரு பெண்மணி தலைமை ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சிறுமியின் பெற்றோர் உட்பட கிராம மக்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலைமை ஆசிரியரை மீட்டு கைது செய்துள்ளனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் இது பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியரே ஒரு சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |