இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோரின் பதவி காலத்தை தற்போது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையான அதிகாரிகள் இன்னும் சில காலம் பணியில் நீடித்திருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் தலைமைச் செயலாதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகவும் 60 வயது வரையும் இருந்தது.
இதை தற்போது 10 ஆண்டுகளாக அதிகரித்த நிலையில், தேசிய வங்கிகளின் நிர்வாக விதிகளிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எப்போது வேண்டுமானாலும் அதிகாரியை பதவியில் இருந்து விடுவிக்கும் அதிகாரம் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அது தொடர்பான நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் மத்திய அரசாணை முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.