ஆந்திரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டு வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி்துள்ளது. மேலும், இந்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலையாக நீடிப்பதால் தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதன் காரணமாக சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இன்று மேலே கூறப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.