மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பட்பரா பகுதியில் ஒரு ரயில்வே தாண்டவளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளமானது காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று காலை 8:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததோடு உயிருக்கு போராடும் நிலையில், ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர சோதனை நடத்தினர்.
இந்நிலையில் சமூகவிரோதிகள் சிலர் ரயில்வே தண்டவாளத்தை தகர்ப்பதற்காக ஒரு பொட்டலத்தில் வெடிகுண்டை வைத்துவிட்டு சென்றுள்ளனர். ஆனால் அந்த சிறுவன் வெடிகுண்டு என தெரியாமல் அதை எடுத்து நண்பர்களுடன் விளையாடியுள்ளார். அந்த சமயத்தில் திடீரென குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் சிறுவன் பரிதாபமாக உயர்ந்ததோடு அருகில் இருந்த ஒரு பெண் மற்றும் குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.