Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புரோக்கர்கள் அம்பலம்… மிகப்பெரிய சதி வலை….. மிரள போகும் இந்தியா… பகீர் தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித் சூர்யா மற்றும் அவர் தந்தையிடம் நடத்திய விசாரணையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நேற்று தேனி மாவட்டம் கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். அவரது தந்தையிடமும் , உதித் சூர்யா_விடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதே போல தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் , துணை முதல்வரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் முடிவில்உதித் சூர்யா-வின் தந்தை வெங்கடேசன் மகனை எப்படியாவது மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்ததை  ஒப்புக்கொண்டதாக  சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து வெங்கடேஷ் , உதித் சூர்யா என மகன் மற்றும் தந்தையை CBCID போலீசார் கைது செய்தனர்.  இவர்கள் மீது ஆள்மாறாட்டம் , கூட்டுச்சதி , போலியான ஆவணம் தயாரித்தல் போன்ற 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த CBCID போலீசார் இருவரையும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

CBCID போலீசார் நடத்திய விசாரணையில்  ஆள்மாறாட்டத்திற்கு உறுதுணையாக இருந்த புரோக்கர்கள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளதாகவும் , அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் எனவும்  சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர். இதே போல உதித் சூர்யா_வின் தாயார் கயல்விழி_யிடம் நடத்திய விசாரணையில்  அவருக்கு  நேரடியான தொடர்பு இல்லை எனவும் , தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த குற்றச்சாட்டில் பணம் எவ்வளவு விதத்தில் கைமாறியது , ஆன்லைன் மூலமாக கைமாறியதா ? அல்லது வங்கி மூலமாக கைமாறியதா ? அல்ல நேரடியாக கொடுக்கப்பட்டதா ? இதில் புரோக்கர்களாக செயல்பட்டது யார் என்பது குறித்தெல்லாம் விசாரணை நடைபெற்றுள்ளது.

நீட் ஆள்மாறாட்டம் வழக்கில் CBCID போலீசார் நடத்திய முதல் நாள் விசாரணையிலேயே பல முக்கிய தகவல் கிடைத்துள்ளது.இந்த வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. உதித் சூர்யா_வின் தந்தை வெங்கடேசன் CBCID போலீஸ் விசாரணையில் உதித் சூர்யாவுக்கு தேர்வு எழுதிய மாணவனை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. அவர் எங்கு இருக்கிறார் என்ற எந்த தகவலும் தனக்கு தெரியாது. தேர்வு எழுதிய மையத்தில் தான் இதுபோன்ற புரோக்கர்கள் இருக்கலாம் அந்த புரோக்கர்கள் சொன்ன அடிப்படையில் தான் சென்னையில் உள்ள ஒரு புரோக்கர் ஒத்துழைப்போடு இந்த ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்ததாக சொல்லப்படுகின்றது.

இந்த தகவலை வைத்துப் பார்த்தோமானால் இது எதோ உதித் சூர்யா_வுக்கு மட்டும் நடந்ததோ , முதல் ஆள்மாறாட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்றல்ல. இந்தியளவில் இதற்காக ஒரு மிகப்பெரிய மோசடி சதிவலை இயங்கி வறுமென்று CBCID போலீசார் கருதுகின்றது. இடைத்தரகர்கள் குறித்த விவரம் கிடைத்துள்ளதால் இந்தியளவில் நீட் ஆள்மாறாட்ட சதிவலை அம்பலமாக வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் தமிழக CBCID போலீசார் நீட் மோசடி சதி கும்பலை கண்டறிந்து இந்தியாவையே மிரள வைக்க போகிறார்கள். அதற்கான காலம் தொலைவில் இல்லை என்பதே CBCID_யிடம் உள்ள ஆதாரம்.

Categories

Tech |