Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய AC….. பாப்பா நீ உள்ள போ….. தீயில் கருகி…. கணவன் மனைவி மரணம்….. திருப்பத்தூர் அருகே சோகம்…!!

திருப்பத்தூர் அருகே ஏசி  வெடித்து கணவன் மனைவி தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். செங்கல்பட்டில் ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் 8 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில்ண்முகம் குடும்பத்தினரோடு சண்முகம் ஏசி போட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மகள் தாய் மஞ்சுளாவை எழுப்பி கழிவறைக்கு போக துணைக்கு அழைத்து வந்துள்ளார். உள்ளே சென்று அந்த சமயத்திலேயே பயங்கர சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறியது. இதையடுத்து கதவை  திறந்து பார்த்தபோது அறை முழுவதும் தீ பரவி கிடந்தது.

இதையடுத்து மகளை கழிவறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கணவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.இதில் கணவன் மனைவி இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்க உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏசி வெடித்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |