பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு நிறுவனத்திடம் முன்பணம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் கலந்து கொள்ள முடியாததால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடிகை சன்னி லியோன் மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சன்னி லியோன் தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மோசடி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார். மேலும் சன்னி லியோன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குற்றப்பிரிவு காவல் துறையினர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.