Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில ”விளக்குமாறு” ஊர்வலம்…! ஆ.ராசாவின் சர்சை பேச்சு… பரபரப்பு விளக்கம் …!!

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், இப்ப நான் பேசறது எல்லாம், இந்து மதத்திலேயே இருக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்கள். இந்த மேடையில் இருக்கிற எல்லா ஜாதிக்கும் சொல்றேன். கொங்கு வெள்ளாள கவுண்டர், முக்குலத்தோர், நாடார், வன்னியர், நாயக்கர், செட்டியார், யாதவர், குயவர் எல்லா ஜாதிக்கு சொல்றேன், ஆதிதிராவிடர் நீங்களாக…

இவர்களுக்கெல்லாம் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ரோருக்கான இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டோம்ல. இவர்கள் எல்லாம் இந்து தானே. இந்த இந்துக்களுக்கு தானே இட ஒதுக்கீடு கேட்டோம். இதை எதிர்த்தவர்கள் யார் ? எதிர்த்தது பிராமணர்கள், ரஜபுத்திரர்களும், மேல் ஜாதியினரும். அவர்களும்  இந்துக்கள் தான். என்ன சொன்னாங்கன்னா….

அகில இந்திய மெடிக்கலில் ஐந்தாம் ஆண்டு மருத்துவப் படிக்கும் மாணவர்கள் கையில விளக்குமாறு எடுத்துக்கிட்டு, நீங்க எல்லாம் படிக்க வந்துட்டீங்க, இனிமே நாங்க எல்லாம் இதுக்கு தான் போகணும்னு ஊர்வலம் போனாங்களா ? இல்லையா? இல்லன்னு சொல்ல முடியுமா?

உச்ச நீதிமன்றத்தில் தப்புன்னு வாதாடானது யாரு பல்கிவாலா. அப்போ இந்துக்களாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது, உரிமை வேண்டாம் என்று சொன்ன இந்து யாரு? இவனும் இந்து, அவனும் இந்து என விளக்கம் அளித்தார்.

Categories

Tech |