Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலாவதியான பொருள் இருக்கா….? அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி பெண்…. அதிகாரிகளின் தகவல்….!!

கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்து பெட்டகத்தில் காலாவதியான பொருட்கள் இருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்த கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கென்னடி வீதியில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் சகோதரி தற்போது கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்த கர்ப்பிணி பெண் சிங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்து பெட்டகத்தை ஊழியர்கள் அவருக்கு வழங்கியுள்ளனர். அதன்பின் அந்தப் பெண் மருத்துவமனையில் வழங்கப்பட்ட பெட்டகத்தை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அந்த பெட்டகத்தில் இருந்த பேரிச்சம் பழம் உள்ளிட்ட பொருட்கள் காலாவதியாகி இருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் கேட்ட போதும் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, அந்தப் பெண் ஊட்டச்சத்து பெட்டகத்தை முன்கூட்டியே வாங்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனாலும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று வேறு கர்ப்பிணி பெண்களுக்கு பொருட்கள் கொடுக்கப்பட்டிருந்தால் உடனடியாக அவை திரும்ப பெறப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |