Categories
சினிமா தமிழ் சினிமா

குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் குறித்த கேள்வி… இயக்குனர் மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு வினாத்தாளில் பரியேறும் பெருமாள் திரைப்படம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு இன்று நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.

அந்தக் கேள்வியானது, தலைசிறந்த படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்/ கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என்ற கேள்விக்கு, இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை காட்டுகிறது. இப்படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது. இப்படம் மாரிசெல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது ஆகிய மூன்று பதில்களும் இடம்பெற்றிருந்தது

இது குறித்து கருத்து தெரிவித்த அந்தப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், “ “பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது ;இது மானுட சமூகத்தின் பிரதி’ ” என்று அவரது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |