Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கணுமா”..? வீட்டில் உள்ள பொருளே போதும்… நல்ல ரிசல்ட் தரும்..!!

நாம் நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது எடை மட்டும் வயிற்றுக் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.

உடல் பருமன் அதிகரிப்பது எதிர்காலத்தில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதை குறைப்பது மிகவும் கடினம். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்ய விரும்பாதவர்கள் கவலைப்பட வேண்டாம். சில எளிதான வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.

பூண்டு

உடலின் ஆற்றலை அதிகரிக்க பூண்டு உதவுகிறது. ஒன்று அல்லது இரண்டு பூண்டு மொட்டுகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

எலுமிச்சை

உடல் எடையை குறைக்க எலுமிச்சை ஒரு சிறந்த மருந்து. வைட்டமின் சி நிறைந்திருப்பதால் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. காலையில் ஒரு கிளாஸ் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்கும். நீங்கள் அதை
விரும்பவில்லை என்றால் காய்கறிகளில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது நல்லது.

மிளகு

செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும். கருப்பு மிளகில் உள்ள சத்துக்கள் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். இதனால் கொழுப்பு மற்றும் எடையை கட்டுப்படுத்துகிறது.

உப்பு

வழக்கமான உப்பை விட இந்துஉப்பு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் எடையை குறைக்கவும் இது உதவும். இந்து உப்பில் காணப்படும் தாதுக்கள் பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. செரிமானத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

கருவேப்பிலை

கருவெப்பிலை உடல் எடையை குறைக்கும் சூப்பரான ஒரு மருந்து. தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது. எடையை குறைக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த கருவேப்பிலை மிகவும் பயனளிக்கிறது.

வீட்டில் உள்ள வைத்தியங்களை முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் நாள் முழுவதும் ஏராளமான தண்ணீரை குடித்து வந்தாலே உடலிலுள்ள கொழுப்புகள் நீங்கும். இதுதவிர மூலிகை நீர் குடிப்பது உடல் எடையை குறைக்கும். சக்கரை உட்கொள்வதை குறைத்தாள் எடை குறைப்பது மிகவும் பயனளிக்கும். நிறைய சர்க்கரை நிறைந்த உணவுகளை உணவில் இருந்து விலகி விடுங்கள்.

Categories

Tech |