எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தீமை கேட்டு பாருங்கள்.
