நடிகர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் பெரிய அப்டேட் வரும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா பிஜிஎம்மில் மோஷன் போஸ்டர் செம மிரட்டலாக உள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது எச் . வினோத்தின் தரமான செய்கை.