இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த வருடம் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதையடுத்து தற்போதுள்ள இந்திய வீரர்கள் அணிந்துள்ள ரெட்ரோ கிட் ஜெர்சியை தோனி அணிய முடியவில்லையே என்று வருத்தப்பட்டனர்.
இந்நிலையில் விளம்பரப் படத்திற்காக தோனி இந்திய அணியின் ரெட்ரோ கிட் ஜெர்சியை அணிந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய டிரெண்டிங்கில் தோனி தான் நம்பர் ஒன்.