நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. நடிகர் சூர்யா ஆரம்ப காலம் முதல் தற்போது வரை அவர் கடந்து வந்த பாதைகளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூர்யா ரசிகர்களுக்கு அவர் படங்களின் அப்டேட் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றது.
நேற்று சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு சூர்யாவின் 39வது படத்திற்கு ஜெய்பீம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தை 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.