நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு நலத்திட்ட உதவிகளையும் ஒன்றாக செய்து வருகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் வெறும் வதந்தி என்றும், தமிழக அரசு இது தொடர்பாக எந்த தகவலும் அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிதி நிலையை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.