Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்…. இலங்கை கடற்படை அராஜகம் …!!

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதால் 3000 மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பியதாக புகார் அளித்துள்ளனர்.

நீண்டகாலமாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகின்றது.  அன்றாட பிழைப்புக்காக உயிரை பணையம் வைத்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் நித்தம் நித்தம் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். அதிலேயும் கரை திரும்பினால் தான் உண்டு என்று மீன்பிடிக்க செல்லும் அவர்களை  இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |