Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் தேர்வில் முதலிடம்….. ஜனாதிபதியின் பெயர் தெரியவில்லை…. உ.பி ஆசிரியர் தேர்வின் அவலம் …!!

ஆசிரியர் தேர்வில் மோசடி நடந்ததாக கூறி கைது செய்யப்பட்டவர்களில் முதலிடம் பிடித்த ஒருவரிடம் கேள்வி கேட்ட பொழுது நாட்டின் ஜனாதிபதி பெயரை தெரியாது எனக் கூறியுள்ளார்

உத்தரபிரதேச மாநிலத்தில் 67 ஆயிரம் ஆசிரியர் பணியை நிரப்புவதற்காக அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் மோசடி நடந்ததாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு லட்சக்கணக்கில் பலரிடம் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய அதனை எதிர்த்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.  அதனையடுத்து நீதிமன்றம் உதவி ஆசிரியர்களுக்கான 373 39 பதவிகளை காலியாக வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதனால் மாநிலத்தில் நடத்தப்பட இருந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே அரசு ஆசிரியர்கள் தேர்வு செய்வதில் முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது. வழக்கை விசாரித்த அதிகாரி கூறுகையில் மோசடியில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து அவர்களில் 95 சதவீதம் மதிப்பெண் எடுத்து முதலிடத்தை பிடித்த தர்மேந்திர பட்டேலிடம் விசாரிக்கையில் நம் நாட்டின் ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு கூட அவரிடம் பதில் இல்லை எனக் கூறியுள்ளார்.

விசாரணை அதிகாரியான அணிருத் பங்கஜ் இதுகுறித்து கூறுகையில் “முக்கிய குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான கே.எல்.பட்டேல்  வீட்டை சோதனை செய்த பொழுது 22 லட்சத்திற்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது” எனக் கூறினார். கல்வி அமைச்சரான சதீஷ் திவேதி கூறியபொழுது விண்ணப்பதாரர்களின் ஒருவரான ராகுல் என்பவர் ஆள்சேர்ப்பிற்கு லஞ்சம் பெறப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு பட்டேல் மற்றும் 9 பேரை கைது செய்து இருப்பதாக கூறினர்

Categories

Tech |