Categories
உலக செய்திகள்

முன்னாள் அரசு பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள்…. தலீபான்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் நாடுகள்….!!

ஆப்கானிஸ்தானில் அரசபடையை சேர்ந்த முன்னாள் அலுவலர்களை தலீபான்கள் கொலை செய்து வரும் விவகாரத்திற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தவுடன், இதற்கு முந்தைய ஆட்சியில்  பணியாற்றிய அலுவலர்களை குறிவைத்து கொலை செய்து வருவதாக கூறப்பட்டது. இது தொடர்பில், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், ஆப்கானிஸ்தான் நாட்டில் முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் ரகசியமான முறையில் கொல்லப்படுவது மற்றும் மர்மமாக மாயமாவது, தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பு போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் அதிக வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், முன்னாள் அரசு அலுவலர்களுக்கு, தலிபான்கள் ஏற்கனவே வழங்கிய பொதுமன்னிப்புக்கு விரோதமாக இருக்கிறது. எனவே, தலிபான்கள் பொதுமன்னிப்பு அறிவிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும். முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் மாயமானது தொடர்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய பின் தலிபான்கள் என்ன கூறினார்கள்? என்பதை காட்டிலும் அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை பொருத்து தான் அவர்களை அங்கீகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று முன்பே தெரிவித்திருந்தோம். அந்த நிலைப்பாடு தற்போதும் தொடர்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |