அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 – 19 ஆண்டுகள் அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தவர் கே. என் ராமச்சந்திரன். இவர் நடத்த்தி வரும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்திற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் பெற்று கடன் கேட்டிருந்தார். 20 கோடி ரூபாய்க்கு போதுமான ஆவணங்கள் இல்லாததால் வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு விமான டிக்கெட் போட்டு கொடுத்துள்ளார்.
இதில் இவர் அறக்கட்டளை பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோசடி செய்து பணம் பெற்றதாக சிபிஐயை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நாடியதால் இந்த வழக்கை எம்.பி , எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம் ராமச்சந்திரன் , வங்கி மேலாளர் தியாகராஜன் , ராமச்சந்திரனின் மகன் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
தண்டனை விவரம் மாலை அறிவிக்கப்படுமென்று நீதிபதி தெரிவித்த நிலையில் வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் , அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரன் மற்றும் அவரது மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உததரவிட்டது. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.