திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் விமான நிலையத்திலிருந்து முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார். இவர் ராமநாதபுரம் பரமக்குடியில் நடைபெறும் கூட்டத்திற்காக சென்னையிலிருந்து நேற்று காலை மதுரைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். பின்னர் விமான நிலையத்தில் வைத்து அவர் காணொலி காட்சி மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் மகன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை எம்.எல்.ஏக்கள், மூர்த்தி, டாக்டர் சரவணன், பொன், முத்துராமலிங்கம், தமிழ் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தமிழரசி ஆகியோர் வரவேற்றுள்ளனர். அதன்பின் அவர் மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பரமக்குடிக்கு சென்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.