மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, EWS பிரிவுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய அரசு சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது?.
எதன் அடிப்படையில் இந்த வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது? ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொருளாதார வரம்புகளில் வேறுபாடுகள் உள்ள நிலையில் எந்த ஆய்வின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது? அந்த ஆய்வில் யாரெல்லாம் இடம் பெற்றார்கள்? என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான பதில்களை மத்திய அரசு ஒரு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற அக்டோபர் 3-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.