ஏவுகணைத் தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவின் வடக்கில் அஜாஸ் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் துருக்கியின் குர்திஷ் பயங்கரவாத அமைப்பினர் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்கள் அங்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்நாட்டு காவல் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறிப்பாக படுகாயமடைந்த மூவரில் ஒருவரின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக சிரியாவின் விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.