கோவையில் இரண்டாம் நாள் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி தீய சக்தியான திமுகவை தேர்தலில் இருந்து புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரண்டாம் நாள் பரப்புரை தொடங்கினார். அதன்பின் அவர் மக்களிடையே பேசியதாவது,சிங்காநல்லூரில் பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின் வேறு அவதாரம் எடுத்து விட்டார். தேர்தல் என்றாலே அவர் பல்வேறு நாடகங்களை நடத்தும் நடிகராக மாறுகிறார்.
இந்த நாடகத்திற்கு வடநாட்டில் உள்ள பிரசாந்த் கிஷோர் என்பவர் தான் திரைக்கதை,வசனம் ஆகியவற்றை எழுதித் தருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் கோவையில் அரங்கேறிய நாடகம் செல்லுபடியாகவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் அராஜகம் தலைவிரித்து ஆடும். அதுமட்டுமின்றி திமுக ஒரு வாரிசு கட்சி. தீய சக்தியான திமுகவை புறக்கணித்து பொதுமக்களாகிய தாங்கள் அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தெரிவித்தார்.