கர்நாடகா அரசியலில் குமாரசாமி அரசு கவிழ்ப்பதற்கு நடைபெற்ற அனைத்தும் அமித்ஷா_வுக்கு தெரிந்தே நடந்ததாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறிய ஆடியோ ஓன்று வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா அரசுக்கு எதிராக அந்த கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை போர்க்கொடி தூக்கியதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
இந்நிலையில் பாஜக நிர்வாகி களிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த அந்த ஆடியோவில் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் அமித்ஷா மேற்பார்வை செய்து அமித்ஷா_தான் என்று கூறுவது போல பதிவாகி உள்ளது.
மேலும் ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் மும்பையில் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்தும் அமித் ஷாவுக்கு தெரிந்தே நடந்ததாகவும் எடியூரப்பா கூறுவதுபோல பதிவாகி உள்ளது. இந்த ஆடியோவில் உண்மை தன்மை குறித்து எடியூரப்பா கேள்வி எழுப்ப வில்லை என்று அதோடு கட்சியின் நலன் கருதி பாஜகவினரோடு அவ்வாறு பேசியதாகவும் கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.