பிரதமர் மோடி வேண்டுகோளுக்கிணங்க சுயஊரடங்கை கடைபிடிக்குமாறு தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள்.
இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வெளிநாட்டுப்பயணி உட்பட 4 பேர் உயிழந்துள்ளனர். மக்கள் கூட்டமாக செல்வதை தடுக்கும் வகையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கபிட்டு இருந்தாலும் இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தை 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பொறுத்தவரை பெரிய பெரிய கடைகள் , மால்கள், திரையரங்குகள் அடைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை மிகுந்த சிறப்பாக கடைபிடித்து வருவதாக பிரதமர் பாராட்டிய நிலையில் பிரதமர் வலியுறுத்திய சுய ஊரடங்குக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்திருந்தார்.
இந்த வகையில் நேற்று முன்தினம் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுய ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பிரதமர் சொல்வதைப்போல தேமுதிக நிர்வாகிகள் , தொண்டர்கள் வீட்டு வாசலில் நின்று கைதட்டி கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களை மனதார பாராட்டுவோம் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.