அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் மழைநீர் சேகரிப்பு குறித்து வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி வேலுமணி மழை நீரை ஒவ்வொரு குடும்பத்தினரும் சேமிக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இறைவன் கொடுத்த கொடை மழை அந்த மழை நீரை சேமிப்பது மிக மிக அவசியம். 200 சதுர அடி கொண்ட வீட்டில் முறையாக மழைநீரை சேமித்தோம் என்றால் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு தேவையான மழை நீரை சேமிக்கலாம். தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் மழை நீரை சேமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நதிகளை மீட்போம், #காவேரிகூக்குரல் போன்று மக்களின் மேல் அக்கறை கொண்டு நீர்வளம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் மதிப்பிற்குரிய @SadhguruJV அவர்களை #RainWaterChallenge-ல் பங்கெடுத்து அதன் அவசியத்தை உணர்த்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #TNWaterWise #Chennai pic.twitter.com/e7MIoouk7H
— SP Velumani (@SPVelumanicbe) August 6, 2019
இனி பெய்கின்ற ஒரு துளி மழை நீர் கூட வீணாகக்கூடாது. இதை நாம் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்படுத்துவோம். மக்கள் மேல் அக்கறை கொண்டவர்களும்,மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழை நீரின் அவசியத்தை உணர்த்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து மழை நீரை சேகரித்து வளமான பூமியாக தமிழ்நாடு தொடர்ந்திட ஆதரவு அளிக்குமாறு முதல்வர் பழனிசாமியும் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
ப்ரார்த்தனைகள் எப்போதும் வீண் போவதில்லை. மழை வேண்டி @CMOTamilNadu நம்மை செய்ய வைத்த யாகங்கள் துணை நின்று, இந்திரன்கொடுக்கும் கொடை மழை! பத்திரமாக சேமிப்போம். #tnwaterwise #RainWaterHarvesting https://t.co/myB6oplWyY
— SP Velumani (@SPVelumanicbe) August 8, 2019